என் மலர்
செய்திகள்

கைது
காரையூர் அருகே மணல் கடத்தியதாக 2 பேர் கைது
காரையூர் அருகே மணல் கடத்தியதாக 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரையூர்:
காரையூர் அருகே உள்ள மேலத்தானியம் அம்மாபட்டி விளக்கு ரோட்டின் வழியாக மணல் கடத்தி செல்லப்படுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் காரையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்வாசகன் தலைமையிலான போலீசார் அம்மாபட்டி விளக்கு ரோட்டில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை மேற்கொண்டபோது அதில், மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து டிப்பர் லாரி டிரைவர் மூர்த்தி மற்றும் உரிமையாளர் சீகம்பட்டி நல்லையா மகன் கருப்பையா ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டிப்பர் லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story






