என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கறம்பக்குடி பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது

    கறம்பக்குடி பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கறம்பக்குடி:

    கறம்பக்குடி பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில், கறம்பக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ், ரெகுநாதபுரம் சப்-இன்ஸ்பெக்டர் ரவி, மழையூர் சப்- இன்ஸ்பெக்டர் சுப்பரமணியன் ஆகியோர் மளிகை மற்றும் பெட்டிக் கடைகளில் சோதனை நடத்தினர். அப்போது தங்களது கடைகளில் புகையிலை பொருட்கள் விற்றதாக பாலமுருகன் (வயது 46), சூரியமூர்த்தி (45), ஆனந்தன் (25) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
    Next Story
    ×