என் மலர்
செய்திகள்

திருப்பூரில் வருவாய்த்துறை அலுவலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி
திருப்பூரில் வருவாய்த்துறை அலுவலர்கள் தர்ணா
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது.
திருப்பூர்:
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட இணை செயலாளர் சண்முகவடிவேல் தலைமை தாங்கினார். வருவாய் துறையில் அனைத்து ஊழியர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். கருணை அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டவர்களின் பணியை ஒரே அரசாணையில் பணிவரன்முறை செய்து ஆணையிட வேண்டும். முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் பணியிடங்களை ஒன்றுக்கு 1:2 என்ற விகிதத்தில் நிரப்ப வேண்டும் என்பது உள்பட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் முருகதாஸ் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். மாவட்ட பொருளாளர் கண்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் தங்கவேல் உள்பட வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கலெக்டர் அலுவலகப் பொறுப்பாளர் சதீஷ் குமார் நன்றி கூறினார்.
Next Story