என் மலர்

    செய்திகள்

    மன்னார்குடியில் மாதர் சங்கத்தினர் விறகு அடுப்பில் சமைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டபோது எடுத்தபடம்.
    X
    மன்னார்குடியில் மாதர் சங்கத்தினர் விறகு அடுப்பில் சமைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டபோது எடுத்தபடம்.

    கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து மாதர் சங்கத்தினர் நூதன போராட்டம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    மன்னார்குடியில் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து விறகு அடுப்பில் சமைத்து மாதர் சங்கத்தினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    மன்னார்குடி:

    சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும், விலை உயர்வை ரத்து செய்யக்கோரியும் மன்னார்குடியில் மாதர் சங்கத்தினர் விறகு அடுப்பில் சமைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மன்னார்குடி பெரியார் சிலை முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு சங்கத்தின் ஒன்றிய தலைவர் வனிதாதேவி தலைமை தாங்கினார். மாதர் சங்க ஒன்றிய செயலாளர் பூபதி, நகர செயலாளர் மீனாம்பிகை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    போராட்டத்தில் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் பாஸ்கரவள்ளி கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி ேபசினார். இதில் ஒன்றிய பொருளாளர் ஈஸ்வரி மற்றும் திரளான பெண்கள் கலந்து கொண்டு கியாஸ் சிலிண்டரின் விலையை குறைக்க வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

    Next Story
    ×