என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கெலமங்கலம் மின்வாரிய அலுவலகத்தில் ஊழியர்களிடம் தகராறு செய்த தொழிலாளி கைது

    ராயக்கோட்டை அருகே கெலமங்கலம் மின்வாரிய அலுவலகத்தில் ஊழியர்களிடம் தகராறு செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
    ராயக்கோட்டை:

    கெலமங்கலம் அருகே உள்ள ஒன்னுகுறிக்கி கிராமத்தை சேர்ந்தவர் ரவீந்தர் (வயது 47). தொழிலாளி. இவர் கெலமங்கலம் மின்சார வாரிய அலுவலகத்திற்கு, நேற்று மது போதையில் வந்தார். 

    பின்னர் அங்கு பணியில் இருந்த ஊழியர்களை அவர் ஆபாச வார்த்தையால் திட்டி தகராறு செய்தார். இது குறித்து மின்சார வாரிய உதவி பொறியாளர் கண்ணையன் கெலமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவீந்தரை கைது செய்தனர்.
    Next Story
    ×