என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கறம்பக்குடி அருகே மது விற்ற 3 பேர் கைது

    கறம்பக்குடி அருகே மது விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கறம்பக்குடி:

    கறம்பக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கறம்பக்குடி பேரூராட்சி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு அருகே இரவு மற்றும் காலை நேரங்களில் மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த அண்ணாத்துரை, குமார், வீரமுத்து ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 30 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    Next Story
    ×