என் மலர்
செய்திகள்

சிவகங்கை அருகே 2 சரக்கு வாகனங்கள் விபத்துக்குள்ளாகி இருப்பதை படத்தில் காணலாம்.
சிவகங்கை அருகே 2 சரக்கு வாகனங்கள் மோதல்- காய்கறிகள் சாலையில் சிதறின
சிவகங்கை அருகே 2 சரக்கு வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. அதில் இருந்த காய்கறிகள் சாலையில் சிதறி கிடந்தன. இந்த விபத்தில் வாகன ஓட்டுனர்கள் 2 பேரும் காயம் அடைந்தனர்.
சிவகங்கை:
சிவகங்கையை அடுத்துள்ள கூட்டுறவுபட்டி கிராமத்தை சேர்ந்தவர் பொன்னையா. விவசாயி. இவர் தனது தோட்டத்தில் விளைவிக்கப்பட்ட பப்பாளி பழங்களை விற்பதற்காக ராமநாதபுரத்திற்கு ஒரு சரக்கு வாகனத்தில் ஏற்றி சென்றார். அந்த வாகனத்தை அவரே ஓட்டி சென்றார்.
அவர் சிவகங்கை-மதுரை பைபாஸ் ரிங்ரோடு பகுதியில் சென்ற போது மதுரையில் இருந்து தொண்டி நோக்கி காய்கறி ஏற்றிகொண்டு வந்த மற்றொரு சரக்கு வாகனம் மீது மோதியது. இதில் 2 சரக்கு வாகனத்திலும் ஏற்றப்பட்டு இருந்த காய்கறி, பழங்கள் சாலையில் சிதறி ஓடின.
பொன்னையா ஓட்டி வந்த சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் அதில் இருந்த 1½ டன் பப்பாளி பழங்கள் சாலையில் சிதறி கிடந்தன. இந்த விபத்தில் 2 சரக்கு வாகனத்தில் வந்த 2 வாகன டிரைவர்களும் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து சிவகங்கை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






