search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடலூரில், விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி
    X
    கடலூரில், விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி

    3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கடலூரில், விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

    கடலூரில் 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    கடலூர்:

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். மின்சார ஒழுங்குமுறை சட்டத்தை திரும்ப பெற வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் மஞ்சக்குப்பம் கார் நிறுத்தம் அருகில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

    ஆர்ப்பாட்டத்துக்கு விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளர் தட்சிணாமூர்த்தி தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் கருப்பையன், கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, விவசாய தொழிலாளர் சங்கம் ஒன்றிய செயலாளர் அய்யாதுரை, ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் சுந்தர்ராஜா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். 

    இதில் மக்கள் அதிகாரம் கடலூர் ஒருங்கிணைப்பாளர் நந்தா, வட்டார செயலாளர் ரவி, ஆனந்தி, புரட்சிகர மாணவர், இளைஞர் முன்னணி மாவட்ட செயலாளர் மணியரசன் மற்றும் விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர். 

    முன்னதாக அவர்கள் 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி புதுடெல்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீதான தாக்குதலை கண்டித்தும், போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

    Next Story
    ×