search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகளை லாரியில் ஏற்றப்பட்ட காட்சி.
    X
    திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகளை லாரியில் ஏற்றப்பட்ட காட்சி.

    ‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி: மழையில் நனைந்த நெல் மூட்டைகள் லாரியில் ஏற்றப்பட்டன

    தினத்தந்தி செய்தி எதிரொலியாக அன்னவாசல் அருகே மழையில் நனைந்த நெல் மூட்டைகள் லாரியில் ஏற்றப்பட்டன.
    அன்னவாசல்:

    புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் கடந்த சில நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. அதன் பிறகு தொடர்ந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் அடுக்கி வைக்கப்பட்டு பின்னர் எடுத்து செல்வது வழக்கம். இந்த நிலையில் கடந்து ஒரு மாதகாலமாக அரசு கொள்முதல் செய்யப்பட்ட நெல்களையும், தற்போது கொள்முதல் செய்த நெல்களையும் மாவட்ட நிர்வாகம் எடுத்து செல்லவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் திறந்தவெளி சேமிப்பு கிடங்கிலேயே அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் கடந்த ஒருவார காலமாக தொடர்ந்து ஆங்காங்கே மழை பெய்து வருகிறது

    தற்பொழுது அன்னவாசல் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால், இந்த மழையில் திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகளை சுற்றிலும் குளம்போல் மழை தண்ணீர் தேங்கி நின்றது. இதில் சில மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகிறது. எனவே அரசு கொள்முதல் செய்த நெல் மூட்டைகள் மேலும் வீணாவதற்கு முன்பு அதை எடுத்து செல்ல வேண்டும் என விவசாயிகள் சமூக ஆர்வலர்கள் கூறிவந்தனர். இதுகுறித்து கடந்த வாரம் தினத்தந்தியில் படத்துடன் செய்தி வெளியானது. இதனை தொடர்ந்து அதிகாரிகள் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை லாரியில் ஏற்றி சென்றனர். இதுகுறித்து செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், உடனடியாக நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.

    Next Story
    ×