என் மலர்
செய்திகள்

வேட்டவலத்தில் நிவர் புயல் நிவாரண உதவிகளை வழங்கிய அக்ரி கிருஷ்ணமூர்த்தி
வேட்டவலத்தில் நிவர் புயல் நிவாரண உதவிகள்- அக்ரி கிருஷ்ணமூர்த்தி வழங்கினார்
வேட்டவலம் அருகே நிவர் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாய், போர்வை, உடைகள், அரிசி மற்றும் உணவு பொருட்கள், ரூ.5000 ஆகியவற்றை வழங்கி அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆறுதல் கூறினார்.
வேட்டவலம்:
வேட்டவலம் அருகே பிடாரன்கொட்டாய் பகுதியில் நிவர் புயல் மழையால் பெருமாள் என்பவரின் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து முற்றிலும் சேதமடைந்தது. அதேபோல் சுனைமேட்டுத்தெருவில் வசிக்கும் சுரேஷ் என்பவர் வீடும் மழையால் சேதமடைந்தது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நகர செயலாளர் கே.செல்வமணி ஏற்பாட்டில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளரும், மாவட்ட ஆவின் தலைவருமான அக்ரி கிருஷ்ணமூர்த்தி பாய், போர்வை, உடைகள், அரிசி மற்றும் உணவு பொருட்கள், ரூ.5000 ஆகியவற்றை வழங்கி ஆறுதல் கூறினார்.
இதையடுத்து வேட்டவலம் பேரூராட்சிக்கு உட்பட்ட நடுத்திட்டு பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை முகாமில் தங்கி உள்ளவர்களுக்கு பாய், போர்வை, பிரட், பிஸ்கட் போன்ற பொருட்களை வழங்கினார்.
இதில் முன்னாள் கவுன்சிலர் சோழன், இளைஞர் பாசறை செயலாளர் ரஜினி, இளைஞர் அணி செயலாளர் அரிவளவன் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story