என் மலர்
செய்திகள்

அஞ்சல் காப்பீடு விழிப்புணர்வு முகாமை வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் தொடங்கி வைத்தார்
அஞ்சல் காப்பீடு விழிப்புணர்வு முகாம் - வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் தொடங்கி வைத்தார்
வேலூர் தலைமை தபால் நிலையத்தில் அஞ்சல் மற்றும் கிராமிய அஞ்சல் காப்பீடு விழிப்புணர்வு முகாமை வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் தொடங்கி வைத்தார்.
வேலூர்:
வேலூர் தலைமை தபால் நிலையத்தில் அஞ்சல் மற்றும் கிராமிய அஞ்சல் காப்பீடு விழிப்புணர்வு முகாம் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு வேலூர் கோட்ட கண்காணிப்பாளர் கோமல்குமார் தலைமை தாங்கினார். வேலூர் தலைமை தபால் அதிகாரி இந்திரகுமாரன், பள்ளி கல்வித்துறை துணை ஆய்வாளர் மணிவாசகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் அங்குலட்சுமி கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். முகாமில், தபால்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு காப்பீடு திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த முகாம் வருகிற 21-ந் தேதி வரை நடைபெறுகிறது.
முகாமில், அஞ்சல் அதிகாரிகள் ராஜகோபாலன், ஆனந்தன், அஞ்சல் ஆய்வாளர் பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் அஞ்சல் தொடர்பு அலுவலர் செல்வகுமார் நன்றி கூறினார்.
Next Story






