என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    மனைவி, மகள் பிரிந்து சென்றதால் கம்ப்யூட்டர் சென்டர் உரிமையாளர் தற்கொலை

    மனைவி, மகள் பிரிந்து சென்றதால் மதுவில் எலிமருந்தை கலந்து குடித்து கம்ப்யூட்டர் சென்டர் உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டார்.
    வேலூர்:

    வேலூர் காகிதப்பட்டறை மலையடிவார பகுதியை சேர்ந்தவர் பொன்னுரங்கம் (வயது 35). இவர் சத்துவாச்சாரியில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வந்தார். இவருடைய மனைவி திலகா. இவர்களுக்கு 6 வயதில் மகள் உள்ளார். பொன்னுரங்கம் அடிக்கடி மதுஅருந்தி விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதனால் விரக்தி அடைந்த திலகா தனது மகளுடன் சலவன்பேட்டையில் உள்ள அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பொன்னுரங்கம் மாமியார் வீட்டிற்கு சென்று மனைவி, மகளை தன்னுடன் வீட்டிற்கு வரும்படி அழைத்துள்ளார். அதற்கு அவர்கள் வர மறுத்துள்ளனர். அதனால் மனவேதனை அடைந்த அவர் நேற்று முன்தினம் இரவு மதுவில் எலிமருந்தை கலந்து குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். இதைக்கண்ட குடும்பத்தினர் அவரை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

    இதுகுறித்து வேலூர் சத்துவாச்சாரி போலீசில் பொன்னுரங்கம் தாயார் அமுதா புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×