என் மலர்tooltip icon

    செய்திகள்

    மனித கை வடிவிலான முள்ளங்கி
    X
    மனித கை வடிவிலான முள்ளங்கி

    கோத்தகிரி மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு வந்த மனித கை வடிவிலான முள்ளங்கி

    கோத்தகிரி மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு வந்த மனித கை வடிவிலான முள்ளங்கியை கடைக்காரர் பொதுமக்கள் பார்வைக்காக வைத்திருந்தார்.
    கோத்தகிரி:

    கோத்தகிரி மார்க்கெட்டிற்கு உள்ளூர்களில் இருந்து மலை காய்கறிகள் மட்டுமின்றி, சமவெளி பகுதிகளிலிருந்தும் ஏராளமான காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இந்த நிலையில் நேற்று மார்க்கெட்டில் உள்ள ஒரு வியாபாரிக்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட முள்ளங்கி மூட்டையில், வித்தியாச வடிவிலான முள்ளங்கி ஒன்று இருந்தது.

    இந்த முள்ளங்கி காண்பதற்கு மனிதர்களின் கை விரல்கள் போன்ற தோற்றம் அளித்தது. இந்த வித்தியாச வடிவிலான முள்ளங்கியை கடைக்காரர் பொதுமக்கள் பார்வைக்காக வைத்திருந்தார். இதனை மார்க்கெட்டிற்கு காய்கறிகள் வாங்க வந்த பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.


    Next Story
    ×