search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அத்வானியுடன் பிரதமர் மோடி, அமித் ஷா, ஜே.பி.நட்டா சந்திப்பு
    X
    அத்வானியுடன் பிரதமர் மோடி, அமித் ஷா, ஜே.பி.நட்டா சந்திப்பு

    அத்வானி பிறந்தநாள், திருப்பதி இலவச தரிசன டோக்கன், பைடன், கமலா ஹாரிஸ் வெற்றி உரை உள்ளிட்ட முக்கிய செய்திகள்

    திருப்பதியில் இலவச தரிசன டோக்கன், அத்வானிக்கு புகழாரம் சூட்டிய மோடி, கமலா ஹாரிஸ் வெற்றியை உற்சாகமாக கொண்டாடிய சொந்த ஊர் மக்கள் உள்ளிட்ட முக்கிய செய்திகளை பார்ப்போம்.

    * பாஜக மூத்த தலைவர் அத்வானியின் பிறந்தநாளையொட்டி அவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். கோடிக்கணக்கான பாஜக தொண்டர்கள் மட்டுமின்றி நாட்டு மக்களுக்கும் அத்வானி வாழும் உத்வேகமாக இருப்பதாக பிரதமர் மோடி புகழாரம் சூட்டி உள்ளார். அத்வானியின் வீட்டுக்கு சென்று பிரதமர் மோடி நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.

    * திருப்பதியில் உள்ள விஷ்ணு நிவாசம் விடுதியில் இன்று முதல் இலவச தரிசன டோக்கன் வழங்கப்படுகிறது.

    * இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 85 லட்சத்தை கடந்துள்ளது. 24 மணி நேரத்தில் புதிதாக 45,674 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 78.68 லட்சம் பேர் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.  குணமடையும் விகிதம் 92.49 சதவீதமாக உயர்ந்துள்ளது.

    * ஹஜ் புனித பயணம் மேற்கொள்பவர்கள் கொரோனா இல்லை என்ற சான்றை கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி கூறினார்.

    * தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்றும், கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

    * அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றதையடுத்து, தமிழகத்தின் மன்னார்குடி அருகே அவரது சொந்த ஊர் மக்கள் இந்த வெற்றியை உற்சாகமாக கொண்டாடினர்.

    * அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றதையடுத்து, அவரது பூர்வீக ஊரான துளசேந்திரபுரம் கிராமத்தில் உள்ள கோவிலில் அமைச்சர் காமராஜ் அர்ச்சனை செய்து வழிபட்டார்.

    * அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி நாளை தொடங்குகிறது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

    * அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன், துணை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு உள்ளூர் தலைவர்கள் முதல் உலக தலைவர்கள் வரை வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர். 

    * ஒட்டுமொத்த அமெரிக்காவும் அநீதிக்கு எதிராக நின்றுள்ளது என்று தனது ஆதரவாளர்கள் மத்தியில் வெற்றி உரையாற்றினார் ஜோ பைடன். யாரையும் கைவிடாத அமெரிக்காவை நாம் உருவாக்கப் போவதாகவும், அனைத்து அமெரிக்கர்களுக்குமான அதிபராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

    * அமெரிக்காவின் துணை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள கமலா ஹாரிஸ், தன்மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த அமெரிக்க மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். தனது இந்த வெற்றி தொடக்கம் தான் என்றும், நாட்டின் பெண்களுக்கு நிறைய சாத்தியங்கள் உருவாக காத்திருப்பதாகவும் அவர் கூறினார்.

    * தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 94 விசைப்படகுகளை அழிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    * பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலியை நீக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் கவுதம் காம்பிர் கூறியுள்ளார்.
    Next Story
    ×