என் மலர்tooltip icon

    செய்திகள்

    தியேட்டரில் சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதை படத்தில் காணலாம்.
    X
    தியேட்டரில் சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதை படத்தில் காணலாம்.

    10-ந் தேதி முதல் 50 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்கள் திறக்க அனுமதி - கலெக்டர் தகவல்

    வேலூர் மாவட்டத்தில் உள்ள தியேட்டர்கள் 50 சதவீத இருக்கைகள் மட்டும் பயன்படுத்தி வருகிற 10-ந் தேதி முதல் திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது.
    வேலூர்:

    தமிழகத்தில் வருகிற 10-ந் தேதி முதல் 50 சதவீத இருக்கைகளுடன் சினிமா தியேட்டர்களை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் உள்ள தியேட்டர்கள், தியேட்டர் வளாகங்கள் (மல்டிபிளக்ஸ்) மற்றும் வணிக வளாகங்களில் உள்ள தியேட்டர்கள் உள்பட அனைத்து தியேட்டர்களும் 50 சதவீத இருக்கைகள் மட்டும் பயன்படுத்தி வருகிற 10-ந் தேதி முதல் திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது. திரைப்படம் ஒளிபரப்புவதற்கு முன்பாக அரசால் வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். மேலும் பார்வையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அவற்றை திரையிட வேண்டும். அனைத்து தியேட்டர் உரிமையாளர்களும் தியேட்டர் திறப்பதற்கு முன்பாக விண்ணப்பம் செய்து அனுமதி பெற்ற பின்னரே தியேட்டர்களை திறக்க வேண்டும். இந்த தகவலை வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே வேலூர், காட்பாடியில் உள்ள சினிமா தியேட்டர்களை திறப்பதற்கான முன்னேற்பாடு பணிகளை அதன் உரிமையாளர்கள் செய்து வருகிறார்கள். விருதம்பட்டில் உள்ள சினிமா தியேட்டரை சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். கிருமிநாசினி தெளித்து, 50 சதவீத இருக்கைகளுடன் தியேட்டரை திறப்பதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது.
    Next Story
    ×