என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து பலி
    X
    விபத்து பலி

    நல்லம்பள்ளி அருகே லாரி மோதி தொழிலாளி பலி

    நல்லம்பள்ளி அருகே லாரி மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நல்லம்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் (வயது 39). கூலித்தொழிலாளி. இவர், தனது தம்பி சங்கருடன் மோட்டார் சைக்கிளில் சேலத்தில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி வந்து கொண்டிருந்தார். நல்லம்பள்ளி அருகே உள்ள கெங்கலாபுரம் தேசிய நெடுஞ்சாலை மேம்பால பகுதியில் வந்தபோது, அந்த வழியாக இரும்பு பாரம் ஏற்றிச்சென்ற லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில், படுகாயம் அடைந்த சக்திவேலை அக்கம் பக்கத்தினர் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் சக்திவேல் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×