search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரோடு வீரப்பன் சத்திரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.
    X
    ஈரோடு வீரப்பன் சத்திரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

    ஈரோட்டில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த 44 பேர் கைது

    ஈரோட்டில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த 44 பேர் கைது செய்யப்பட்டார்கள்.
    ஈரோடு:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் பாஸ்கர் தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட செயலாளர் சிறுத்தை வள்ளுவன், மேற்கு மாவட்ட செயலாளர் அம்பேத்கர், பொறியாளர் அணி மாநில துணைச்செயலாளர் சாதிக் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

    பெண்களுக்கு எதிரான மனுதர்ம சனாதன நூலை தடை செய்ய வேண்டும், பா.ஜ.க. தூண்டுதலின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தொல்.திருமாவளவன் மீது வழக்குப்பதிவு செய்ததை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இதில் கலந்து கொண்ட, மகளிர் விடுதலை இயக்க மாவட்ட செயலாளர் சித்ரா, தொகுதி செயலாளர் கஸ்தூரி தேவி, நிர்வாகிகள் அரங்க முதல்வன், சண்முகம், மதிவாணன், இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாவட்ட அமைப்பாளர் ஜாபர் அலி, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சித்திக், செயலாளர் சலீம், தி.மு.க. மாநகர செயலாளர் சுப்பிரமணியம், பகுதி செயலாளர் செல்வராஜ், தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் சிந்தனை செல்வன் மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகள் கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.

    இந்த ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. அதனால் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒரு பெண் உள்பட 44 பேரை போலீசார் கைது செய்து, அருகில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்துக்கு அழைத்து சென்றனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
    Next Story
    ×