என் மலர்

    செய்திகள்

    கைது
    X
    கைது

    குளித்தலை அருகே மது விற்ற 2 பேர் கைது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    குளித்தலை அருகே மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குளித்தலை:

    குளித்தலை அருகே உள்ள பரளி நால்ரோடு பகுதியில் சட்டவிரோதமாக மது விற்கப்படுவதாக குளித்தலை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் அங்கு சென்ற போலீசார் அப்பகுதியில் மது விற்றுக் கொண்டிருந்த குளித்தலை அருகே உள்ள கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த சிவானந்தம் (வயது 53) என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் வேலாயுதம்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் தளவாப்பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தளவாப்பாளையம் பிரிவு சாலையில் உள்ள ஓட்டலில் மது விற்றுக் கொண்டிருந்த அப்பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் (40) என்பவரை கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்த மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    Next Story
    ×