என் மலர்

  செய்திகள்

  விபத்து
  X
  விபத்து

  காவேரிப்பாக்கம் அருகே டிப்பர் லாரி மோதி என்ஜினீயர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காவேரிப்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் என்ஜினீயர் பரிதாபமாக உயிரிழந்தார்.
  காவேரிப்பாக்கம்:

  பெங்களூரு சிக்பாலர்வாடி பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சீவ் பரமேஸ்வர் (வயது 44). இவர், சென்னையில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று காலை பெங்களூருவில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்னையை நோக்கி சென்று கொண்டிருந்தார். ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தை அடுத்த பெரியகரும்பூர் அருகே சென்றபோது, அந்த வழியாக பின்னால் வந்த ஒரு டிப்பர் லாரி திடீரென அவரின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. அதில் அவர் பலத்த காயம் அடைந்தார்.

  விபத்து பற்றி அப்பகுதியினர் காவேரிப்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி, சப்-இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அவரை மீட்டு சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி சஞ்சீவ் பரமேஸ்வர் பரிதாபமாக உயிரிழந்தார். 

  விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  Next Story
  ×