search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி
    X
    பிரதமர் மோடி

    நீட் தேர்வில் சாதனை படைத்த மாணவர்கள், பீகாரில் மோடியின் 12 பிரச்சார பொதுக்கூட்டம் உள்ளிட்ட முக்கிய செய்திகள்

    நீட் தேர்வில் சாதனை படைத்த மாணவர்கள், நவராத்திரி விழாவில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி, பிரதமர் மோடியின் பீகார் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டங்கள் உள்ளிட்ட முக்கிய செய்திகளை பார்ப்போம்.
    * ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் வாழ்க்கையில் சாதகமான மாற்றம் ஏற்பட வேண்டும் என பிரதமர் மோடி நவராத்திரி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    * இந்தியாவில் முதல் முறையாக நீட் தேர்வில் 720க்கு 720 மதிப்பெண் எடுத்து ஒடிசா மாணவர் சோயப் அப்தாப் மற்றும் டெல்லி மாணவி அகான்ஷா சிங் சாதனை படைத்துள்ளனர்.

    * நீட் தேர்வு முடிவுகள் தொடர்பான புள்ளிவிவர அறிவிப்பில் குளறுபடி கண்டறியப்பட்டதையடுத்து, திருத்தம் செய்யப்பட்டு புதிய பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

    * பீகாரில் ஐக்கிய ஜனதா தளம், பாரதிய ஜனதா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி 12 பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேசுகிறார்.

    * ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும், 370-வது அரசியல் சாசன சட்டத்தை நீக்கிய முடிவை, பா.ஜ.க. அரசு ரத்து செய்ய வேண்டும் என்று ப.சிதம்பரம் வலியுறுத்தி உள்ளார்.

    * இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 74 லட்சத்தை கடந்துள்ளது. 65.24 லட்சம் பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.  உயிரிழப்பு 1.52 சதவீதமாகவும், குணமடைந்தோர் விகிதம் 87.78 சதவீதமாகவும்  உள்ளது.

    * இந்தியாவில் கடந்த ஒன்றரை மாதங்களில் முதல் முறையாக சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 8 லட்சத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. 

    * மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நவராத்திரி விழாவில் இன்று ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அம்மன் காட்சி அளிக்கிறார். பக்தர்கள் மாலையில் 4 மணிக்கு மேல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    * அதிமுகவின் 49-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கட்சி கொடியேற்றினார்.

    * அதிமுகவின் 49-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி, கட்சி தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கொடியேற்றி வைத்தார். அப்போது பேசிய அவர், அதிமுக பொன்விழா ஆண்டிலும் அம்மாவின் அரசாட்சியே தொடர்ந்தது என்ற வரலாற்றை படைப்போம், வாகை சூடுவோம், என்றார்.

    * பெரியகுளம் அருகே அரசுப்பள்ளியில் படித்த ஆடு மேய்க்கும் தொழிலாளியின் மகன் ‘நீட்’ தேர்வில் 720-க்கு 664 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தார்.

    * பிரான்சில் நபிகள் நாயகம் தொடர்பான கேலிச்சித்திரங்களை மாணவர்களுக்கு காட்டிய வரலாற்று ஆசிரியர் தலை துண்டித்து கொல்லப்பட்டார். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு அதிபர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    * பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டிவில்லியர்சை 6-வது வரிசையில் களம் இறக்கியது விமர்சனத்திற்கு உள்ளானது. பயிற்சியாளர் தரப்பில் இருந்து இடது கை, வலது கை பேட்ஸ்மேன் இணைந்து ஆடினால் நன்றாக இருக்கும் என்று யோசனை தெரிவிக்கப்பட்டதால் அவரை களம் இறக்கியதாக பெங்களூரு அணியின் கேப்டன் விராட்கோலி விளக்கம் அளித்தார்

    * கலைத்துறையில் அரசியல் தலையீடு மற்றும் எதிர்ப்புகள் முறையற்றது என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறி உள்ளார்.
    Next Story
    ×