search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பூர் பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ விற்பனை நடைபெற்றபோது எடுத்த படம்.
    X
    திருப்பூர் பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ விற்பனை நடைபெற்றபோது எடுத்த படம்.

    திருப்பூரில் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.1,200-க்கு விற்பனை

    ஆயுதபூஜை நெருங்கி வரும் நிலையில், திருப்பூரில் மல்லிகைப்பூ விலை கிடுகிடுவென உயர்ந்திருந்தது. ஒரு கிலோ ரூ.1,200-க்கு விற்பனை செய்யப்பட்டது.
    திருப்பூர்:

    திருப்பூர் தென்னம்பாளையத்தில் காய்கறி மற்றும் மீன், இறைச்சி மார்க்கெட்டுகள் செயல்பட்டு வருகிறது. இதுபோல் பழைய பஸ் நிலையம் அருகே பல்லடம் ரோட்டில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. தங்களுக்கு தேவையான பொருட்களை இந்த மார்க்கெட்டுக்கு சென்று பொதுமக்கள் வாங்கி செல்கிறார்கள்.

    இந்நிலையில் விசேஷ நாட்களில் காய்கறிகள் மற்றும் பூக்களின் விலை சற்று அதிகமாக இருக்கும். அந்த வகையில் நேற்று திருப்பூர் பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூவின் விலை கிடுகிடுவென உயர்ந்து காணப்பட்டது.

    இதுகுறித்து பூ வியாபாரிகள் கூறியதாவது:-

    திருப்பூர் மார்க்கெட்டிற்கு ஈரோடு, சத்தியமங்கலம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து மல்லிகைப்பூ விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. தற்போது மல்லிகைப்பூவின் வரத்து குறைந்துள்ளது. இதனால் இதன் விலையும் உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.600 முதல் ரூ.800 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது.

    ஆனால் வரத்து குறைவு மற்றும் முகூர்த்த தினங்கள், ஆயுதபூஜை நெருங்கி வரும் காரணங்களினால் மல்லிகைப்பூ நேற்று ஒரு கிலோ ரூ.1,200-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், வருகிற நாட்களில் இவற்றின் விலை அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    Next Story
    ×