என் மலர்

  செய்திகள்

  கோப்புபடம்
  X
  கோப்புபடம்

  ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  முசிறி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  முசிறி:

  கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தெற்குதிட்டையில் பட்டியலின ஊராட்சி மன்ற தலைவரை தரையில் அமரவைத்த சம்பவத்தில் பெண் ஊராட்சி செயலாளரை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், வழக்கை திரும்பபெறக்கோரியும் முசிறி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

  ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய ஆணையர் மனோகரன் தலைமை தாங்கி பேசினார். இதில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஊராட்சி செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று தா.பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக ஒன்றிய ஆணையர் மணிவேல் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் திட்ட ஆணையர் லலிதா, மேலாளர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
  Next Story
  ×