search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கல்லூரி மாணவி தீபாவை பாராட்டிய போது எடுத்த படம்.
    X
    கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கல்லூரி மாணவி தீபாவை பாராட்டிய போது எடுத்த படம்.

    காலி பாட்டில்களில் தத்ரூபமாக ஓவியங்களை வரைந்த ஊட்டி மாணவி- கலெக்டர் பாராட்டு

    ஊரடங்கின்போது கிடைத்த நேரத்தில் காலி பாட்டில்களில் தத்ரூபமாக ஓவியங்களை வரைந்த ஊட்டி கல்லூரி மாணவிக்கு கலெக்டர் பாராட்டு தெரிவித்தார்.
    ஊட்டி:

    ஊரடங்கு உத்தரவால் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளன. பள்ளி, கல்லூரிகள் அடுத்த கல்வி ஆண்டுக்கான பாடங்களை ஆன்லைன் மூலம் கற்றுக்கொடுத்து வருகிறது. ஊரடங்கால் வீடுகளில் முடங்கி இருந்தாலும், சிலர் தங்களுக்கு கிடைக்கும் நேரத்தை பயனுள்ள வகையில் கழித்து வருகின்றனர். ஊட்டியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் ஊரடங்கால் கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டதால், கிடைத்த நேரத்தை தூக்கி எறியப்படும் காலிபாட்டில்களில் தத்ரூபமாக ஓவியம் வரைந்து, அதற்கான பாராட்டை கலெக்டரிடம் பெற்று உள்ளார். அதன் விவரம் வருமாறு:-

    ஊட்டி பட்பயரை சேர்ந்தவர் தீபா. இவர் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் எம்.காம் இறுதியாண்டு படித்து வருகிறார். கொரோனா பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட போது விடுமுறை அளிக்கப்பட்டதால் பல்கலைக்கழகத்தில் இருந்து வீடு திரும்பினார். வீட்டில் சும்மா இருக்காமல் மணித்துளிகளை பயனுள்ளதாக மாற்ற தனது எண்ணங்களாலும், வண்ணங்களாலும் காலி பாட்டில்களில் தத்ரூபமாக ஓவியம் வரைந்தார். 150 பாட்டில்களுக்கு மேல் பல வகையான ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளது. இதுகுறித்து அவர் ஒரு அமைப்புக்கு விண்ணப்பித்தார். அந்த அமைப்பு நேரடியாக வீட்டுக்கு வந்து ஆய்வு செய்து ரியல் வேர்ல்ட் ரெக்கார்ட் புத்தகத்தில் பெயரை இடம் பெற செய்தது. தனக்கு வழங்கிய பாராட்டு சான்றிதழை மாணவி தீபா நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார். கலெக்டர் அந்த மாணவியை பாராட்டி ஊக்குவித்தார்.
    Next Story
    ×