என் மலர்
செய்திகள்

வீடு புகுந்து கொள்ளை
சிவகாசி அருகே வீடு புகுந்து நகை திருட்டு
சிவகாசி அருகே வீடு புகுந்து நகை திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி:
சிவகாசி அருகே உள்ள வடமலாபுரம் பாலாஜி நகரை சேர்ந்தவர் செவ்வராஜ். இவர் தனது குடும்பத்துடன் வெளியே சென்று இருந்த போது அவரது வீட்டின் முன்பக்க கதவை உடைத்து மர்ம நபர் உள்ளே சென்றான். பின்னர் வீட்டின் பீரோவை உடைத்து அதில் இருந்த மோதிரம் உள்பட 4½ பவுன் நகைகளை திருடி சென்றுள்ளான். வீடு திரும்பிய செல்வராஜ் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் திருட்டு சம்பவம் குறித்து திருத்தங்கல் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வீடு புகுந்து தங்க நகைகளை திருடி சென்ற மர்ம ஆசாமியை தேடி வருகிறார்கள்.
Next Story