என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெள்ளத்தில் சிக்கிய நபரை மீட்பது குறித்து தீயணைப்பு வீரர்கள் ஒத்திகையில் ஈடுபட்டபோது எடுத்தபடம்.
    X
    வெள்ளத்தில் சிக்கிய நபரை மீட்பது குறித்து தீயணைப்பு வீரர்கள் ஒத்திகையில் ஈடுபட்டபோது எடுத்தபடம்.

    குன்னூரில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்து தீயணைப்பு வீரர்கள் ஒத்திகை

    வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி, குன்னூர் அருகே உள்ள ஆற்றில் நேற்று நடைபெற்றது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் வடகிழக்கு பருவமழை அதிகமாக பெய்யும். இதனால் நிலச்சரிவு, சாலைகளில் பாறைகள் விழுதல் போன்ற சம்பவங்கள் நடக்கும். வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி, குன்னூர் அருகே உள்ள ஆற்றில் நேற்று நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு குன்னூர் சப்-கலெக்டர் ரஞ்சித் சிங் தலைமை தாங்கினார். குன்னூர் தீயணைப்பு நிலைய அலுவலர் மோகன் மற்றும் தீயணைப்பு வீரர்கள், தன்னார்வ குழுவினர் இணைந்து வெள்ளத்தில் சிக்கிய நபரை மீட்பது போன்று ஒத்திகையில் ஈடுபட்டனர். இதில் வெள்ளத்தில் சிக்கிய நபரை கயிறு கட்டி தீயணைப்பு வீரர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். வெள்ளத்தில் மூழ்கினால் உடலில் இருந்து நீரை வெளியேற்றுவது, சுவாசத்தை சரி செய்வது, முதலுதவி சிகிச்சை அளிப்பது போன்றவை குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் அப்பகுதி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் வனத்துறையினர், போலீசாரும் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×