என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
புவனகிரி, விருத்தாசலம், திட்டக்குடியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
புவனகிரி, விருத்தாசலம் மற்றும் திட்டக்குடியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
புவனகிரி:
உத்தரபிரதேசத்தில் இளம் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்ததை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் பல்வேறு அமைப்பு சார்பில் புவனகிரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சங்க ஒன்றிய செயலாளர் சதீஷ் தலைமை தாங்கினார். விவசாய சங்க மாவட்ட துணை தலைவர் ராமச்சந்திரன், ஒன்றிய செயலாளர் சதானந்தம் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். இதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் சதீஷ்குமார், ஸ்டாலின், சூர்யா, ஜான்தாமஸ், மணி, ராஜதுரை, சிவக்குமார், கிருபாகரன், திலீபன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மணவாளன், திராவிடர் கழகம் யாழ்திலீபன், தமிழக வாழ்வுரிமை கட்சி முருகன், பாண்டியன், இந்திய தொழிற்சங்கத்தை சேர்ந்த மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் திட்டக்குடியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு வட்ட செயலாளர் பாண்டியன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் உத்தரபிரதேசத்தில் இளம் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் வட்ட தலைவர் மூர்த்தி, வட்ட பொருளாளர் பாண்டியன், வட்ட துணைத் தலைவர் மணிகண்டன், வட்ட துணை செயலாளர் சண்முகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் விருத்தாசலம் பாலக்கரையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க வட்ட செயலாளர் நெல்சன் தலைமை தாங்கினார். வட்ட தலைவர் பரமசிவம், இந்திய மாணவர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் சின்னத்தம்பி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கனகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட துணை தலைவர் அசோகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார். இதில் உத்தரபிரதேசத்தில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது.
இந்திய ஜனநாயக, வாலிபர் சங்கம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி, இந்திய மாணவர் சங்கம் சார்பில் சிதம்பரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட துணைச்செயலாளர் ஆழ்வார் தலைமை தாங்கினார். இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் குமரவேல், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் லெனின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க முன்னாள் மாநில தலைவர் ரமேஷ்பாபு, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில செயலாளர் வாஞ்சிநாதன், சுவாமி சகஜானந்தா மணிமண்டப குழு ஒருங்கிணைப்பாளர் பாலையா ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை விளக்கி பேசினார்கள். உத்தரபிரதேசத்தில் இளம் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நகர செயலாளர் ராஜா, மாவட்ட குழு முத்து, மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story






