search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போராட்டம்
    X
    போராட்டம்

    நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

    பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் கடந்த 16-ந் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 10-வது நாளாக நேற்று இந்த போராட்டம் நீடித்தது.
    காரைக்கால்:

    காரைக்காலை அடுத்த நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கடந்த 6 மாத காலமாக ஊதியம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. ஊதியம் வழங்காத புதுச்சேரி அரசை கண்டித்தும், கர்நாடகா, ராஜஸ்தான், மேற்கு வங்காளம் உள்பட பல மாநிலங்களில் உள்ளது போல் புதுச்சேரி உள்ளாட்சி ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அரசே நேரடியாக ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் கடந்த 16-ந் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 10-வது நாளாக நேற்று இந்த போராட்டம் நீடித்தது.

    போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களை காரை பிரதேச அரசு ஊழியர் சம்மேளன பொதுச் செயலாளர் ஷேக் அலாவுதீன், நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர் சம்மேளன தலைவர் அய்யப்பன், துணை பொதுச்செயலாளர் சண்முகராஜ் ஆகியோர் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். நாளை (வியாழக்கிழமை) முதல் மக்களை பாதிக்காத வகையில் தொடர் போராட்டம் நடத்தப்போவதாக ஊழியர்கள் அறிவித்துள்ளனர். ஊழியர்களின் இந்த போராட்டத்தால், பிறப்பு- இறப்பு சான்றிதழ் வழங்குதல், துப்புரவு பணிகள், வருவாய் மற்றும் பொறியியல் பிரிவு பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன.
    Next Story
    ×