search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது எடுத்தபடம்.
    X
    சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது எடுத்தபடம்.

    லால்குடி, ஸ்ரீரங்கத்தில் சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    லால்குடி, ஸ்ரீரங்கத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் முன் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    லால்குடி:

    வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடைபெறும் லஞ்ச லாவண்யத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு. சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் மற்றும் ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தினர் லால்குடியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் லால்குடி ஒன்றிய செயலாளர் ஜெகதீசன் தலைமை தாங்கினார். ஆட்டோ ஓட்டுனர் சங்க மாவட்ட தலைவர் சம்பத், சி.ஐ.டி.யு. தலைவர் பன்னீர்செல்வம், செயலாளர் செல்வராஜ், பொருளாளர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதுபோல் ஸ்ரீரங்கம் வட்டார போக்குவரத்து அலுவலகம முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சாலை போக்குவரத்து சங்க மாவட்ட தலைவர் சந்திரன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், சாலை போக்குவரத்து சங்க செயலாளர் வீரமுத்து, பொருளாளர் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    வாகனங்கள் செல்லும்போது காவல்துறையினர் வாகனத்தின் பதிவு எண்ணை குறித்து வைத்து அபராதம் விதிப்பதை தடுக்க வேண்டும். புதிய வேக கட்டுப்பாட்டு கருவி அமைக்கச்சொல்லி கட்டாயப்படுத்த வேண்டாம். வங்கிக் கடன் தவணையை ஓராண்டிற்கு நீட்டிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
    Next Story
    ×