search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதரில் வீசப்பட்டுள்ள ஐம்பொன் சிலை
    X
    புதரில் வீசப்பட்டுள்ள ஐம்பொன் சிலை

    அந்தியூர் வாகீஸ்வரர் கோவில் ஐம்பொன் சிலையை உடைத்து புதரில் வீசி சென்ற வாலிபர்

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே வாகீஸ்வரர் கோவில் ஐம்பொன் சிலையை உடைத்து புதரில் வீசி சென்ற வாலிபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பட்லூரில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த வாகீஸ்வரர் கோவில் உள்ளது.

    இக்கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இந்த கோவிலில் ரூ. 5 லட்சம் மதிப்பில் உமாமகேஸ்வரி உடனமர் வாகீஸ்வரர், உற்சவ மூர்த்தி ஐம்பொன் சிலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டு பக்தர்கள் வழிபட்டு வந்தனர்.

    சம்பவத்தன்று கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற வாலிபர் உண்டியலை உடைக்க முயன்றார். ஆனால் முடியவில்லை.

    அதன் பின்னர் அங்கிருந்த மின்சார சுவிட்டை ஆப் செய்து விட்டு கோவிலில் வைக்கப்பட்டிருந்த ஐம்பொன் சிலையை உடைத்தார். அதனை கோவிலுக்கு பின்புறம் உள்ள சுற்றுச்சுவரின் அருகில் உள்ள புதருக்குள் வீசி விட்டு சென்று விட்டார்.

    இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து கோவில் செயல் அலுவலர் பிரேமாவுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் வெள்ளித்திருப்பூர் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினார்கள். கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர். இந்த கோவிலில் கண்காணிப்பு கேமிரா அமைக்கப்பட்டு உள்ளது.

    அதில் வாலிபர் ஒருவர் கோவிலுக்குள் நுழைந்து உண்டியலை உடைக்கும் காட்சிகள் தெளிவாக பதிவாகி உள்ளது. அதனை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×