என் மலர்

  செய்திகள்

  மரணம்
  X
  மரணம்

  கல்குவாரி தண்ணீரில் மூழ்கி மூதாட்டி பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கல்குவாரி தண்ணீரில் மூழ்கி மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  சிவகாசி:

  சிவகாசி அருகே உள்ள மாரனேரி பி.திருவேங்கிடபுரம் வடக்கு காலனியை சேர்ந்தவர் பொன்னுச்சாமி மனைவி பழனியம்மாள் (வயது 62). இவர் அதே பகுதியில் தனி வீட்டில் வசித்து வந்தார். பழனியம்மாளின் மகன் மாடசாமி தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். பட்டாசு ஆலையில் வேலை செய்து வந்த பழனியம்மாள் கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். சர்க்கரை நோய் பாதிப்பில் இருந்து விடுபட விளாம்பட்டியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் தனது வீட்டின் அருகில் உள்ள கல் குவாரிக்கு மூதாட்டி பழனியம்மாள் குளிக்க சென்ற போது அங்கு தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த மாரனேரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
  Next Story
  ×