என் மலர்
செய்திகள்

பஞ்சநதி குளம்
பஞ்சநதி குளத்தின் சுற்றுச்சுவரை சீரமைக்க கோரிக்கை
பஞ்சநதி குளத்திற்கு தண்ணீர் வரும் வாய்க்கால்களும் தூர்வாரப்படாத நிலையில் உள்ளன. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் வாய்க்கால் களை தூர்வாரி சுற்றுச்சுவரை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாடாலூர்:
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் கிராமத்தில் பஞ்சநதிக்குளம் உள்ளது. இந்த குளம் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கும், பக்தர்கள் புனித நீராடுவதற்கும் வசதியாக இருந்தது. இந்நிலையில் இக்குளத்தை சுற்றியுள்ள சுவர்கள் சரிந்த நிலையில் உள்ளன. மேலும் குளத்திற்கு தண்ணீர் வரும் வாய்க்கால்களும் தூர்வாரப்படாத நிலையில் உள்ளன. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் வாய்க்கால் களை தூர்வாரி சுற்றுச்சுவரை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story