என் மலர்

  செய்திகள்

  ரவுடி சங்கர்
  X
  ரவுடி சங்கர்

  என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி சங்கரின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னையில் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி சங்கரின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி உள்ளது.
  சென்னை: 

  சென்னை அயனாவரத்தில் போலீசை வெட்டியதாக ரவுடி சங்கர் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். அயனாவரம் ஆய்வாளர் நடராஜன் தலைமையிலான போலீசார் கஞ்சா வியாபாரியான ரவுடி சங்கரை, கொலை வழக்கு ஒன்றில் அவரை பிடிக்க முயன்றபோது போலீசாரை ரவுடி சங்கர் தாக்கியதாக கூறப்படுகிறது. தற்காப்புக்காக போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ரவுடி சங்கர் உயிரிழந்தார்.

  இதனைத்தொடர்ந்து சங்கர் உடலை மறு பிரேத பரிசோதனை கோரிய மனு செப்டம்பர் 14ஆம் தேதிக்கு தள்ளிவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 
   
  இந்நிலையில் சென்னையில் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி சங்கரின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது. சங்கரின் உடலில் துப்பாக்கி குண்டு பாய்ந்த 3 இடங்களை தவிர மேலும் 12 இடங்களில் காயம் உள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    
  தற்போது சங்கர் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
  Next Story
  ×