என் மலர்

  செய்திகள்

  கோப்புபடம்
  X
  கோப்புபடம்

  கிடப்பில் போடப்பட்ட புறவழிச்சாலை பணிகளை தொடங்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருத்துறைப்பூண்டியில் கிடப்பில் போடப்பட்ட புறவழிச்சாலை பணிகளை விரைவில் தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  திருத்துறைப்பூண்டி:

  திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெருக்கடியை கட்டுப்படுத்த நாகை- திருவாரூர் சாலைகளை இணைக்கும் புறவழிச்சாலை திட்டம் 2008-ம் ஆண்டு தொடங்க திட்டமிட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது இந்த பணிகள் நிறுத்தப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ள இந்த பணியை தொடங்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் 5 ஆயிரம் பேரிடம் கையெழுத்து பெறப்பட்டு முதல்-அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

  தற்போது புறவழிச்சாலை அமைய உள்ள வழித்தடத்தில் ரெயில்வே பாலம் மற்றும் தண்டவாளம் அமைக்கப்படும் என ரெயில்வே துறை தெரிவித்துள்ளது. இதனால் புறவழிச்சாலை பணிகளில் மேலும் தாமதம் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. தற்போது புறவழிச்சாலை பணிகள் மீண்டும் தொடங்கப்படும் பட்சத்தில் இன்றைய சூழலுக்கு ஏற்ப கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்வது அவசியம் ஆகும். எனவே நாள்தோறும் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி தவிக்கும் திருத்துறைப்பூண்டி பகுதியில் புறவழிச்சாலை பணிகளை மீண்டும் தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  Next Story
  ×