என் மலர்
செய்திகள்

நீதிமன்ற வளாகத்திற்கு முன்பு அதிக நீர் தேங்கி சேறும் சகதியுமாக உள்ளதை படத்தில் காணலாம்.
மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக காட்சியளிக்கும் கோர்ட்டு வளாகம்
ஜெயங்கொண்டம் கோர்ட்டு வளாகத்தில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. அதை தவிர்க்க சிமெண்டு தளம் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் குற்றவியல் கோர்ட்டு, கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது நேற்று முன்தினம் முதல் கோர்ட்டு திறக்கப்பட்டு, வழக்குகள் தொடர்பான பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும் வழக்குகள் தொடர்பாக பொதுமக்கள், வக்கீல்கள் உள்ளிட்டோர் கோர்ட்டுக்கு வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் அப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக கோர்ட்டு வளாகத்தில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால் கோர்ட்டுக்கு வரும் பொதுமக்கள், வக்கீல்கள் உள்ளிட்டோர் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
சில முதியவர்கள் சகதியில் வழுக்கி விழுந்த சம்பவமும் நடந்துள்ளது.
மேலும் தேங்கி நிற்கும் மழைநீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி, நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளது. எனவே கோர்ட்டு முன்பும், கோர்ட்டு வளாகத்தை சுற்றியும் மண் கொட்டி மேடாக்கி, சிமெண்டு தளம் அல்லது சிமெண்டு கல் பதித்து செப்பனிட வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story