என் மலர்

    செய்திகள்

    மகேந்திரன் தாய்
    X
    மகேந்திரன் தாய்

    சாத்தான்குளம் மகேந்திரன் நெஞ்சு வலி காரணமாகவே உயிரிழந்துள்ளார்: சிபிசிஐடி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    மகேந்திரன் நெஞ்சு வலி காரணமாகவே உயிரிழந்துள்ளார் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சிபிசிஐடி தெரிவித்துள்ளது.
    சாத்தான்குளம் காவல்நிலையத்தில் போலீசார் தாக்கியதில் தந்தை மற்றும் மகன் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் ஐந்துக்கும் மேற்பட்ட போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

    அதனைத்தொடர்ந்து ஏற்கனவே விசாரணைக்கு அழைத்துச் சென்ற எனது மகன் மகேந்திரன் போலீசார் கடுமையாக தாக்கியதால் உயிரிழந்தார் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பெண் ஒருவர் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கு சிபிசிஐடி போலீசார் விசாரித்து வந்தனர். இன்று சாத்தான்குளம் மகேந்திரன் மரண வழக்கில் சிபிசிஐடி  நிலை அறிக்கை தாக்கல் செய்தது. அதில் ‘‘மகேந்திரன் நெஞ்சு வலி காரணமாகவே உயிரிழந்துள்ளார்’’ எனத் தெரிவித்துள்ளது.
    Next Story
    ×