என் மலர்

    செய்திகள்

    கொரோனா வைரஸ் பரிசோதனை
    X
    கொரோனா வைரஸ் பரிசோதனை

    கோவையில் 524 பேருக்கு கொரோனா - மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 19 ஆயிரத்தை கடந்தது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கோவையில் நேற்று 524 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்தை கடந்துள்ளது.
    கோவை:

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தீவிர கண்காணிப்பு பிரிவு வார்டில் பணியாற்றி வரும் டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கு தொடர்ந்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. நேற்று 34 வயது பெண் டாக்டர், 40 வயது நர்ஸ், வெள்ளலூர் அதிவிரைவுப் படையை சேர்ந்த 34, 47 வயது வீரர்கள், இ.எஸ்.ஐ. மருத்துவமனையை சேர்ந்த 57 வயது பெண் மருத்துவப் பணியாளர், கோவை மாநகர் பகுதியை சேர்ந்த 34 வயது ஆண் காவலர் ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இதுதவிர மேட்டுப்பாளையத்தில் 40 பேர், காரமடையில் 34 பேர், பொள்ளாச்சியில் 23 பேர், விளாங்குறிச்சியில் 20 பேர், துடியலூரில் 19 பேர், ஒண்டிப்புதூரில் 18 பேர், கணபதியில் 16 பேர், வடவள்ளியில் 15 பேர், பீளமேட்டில் 12 பேர் உள்பட 524 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 479 ஆக உயர்ந்து உள்ளது.

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 60, 67 வயது முதியவர்கள், இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற 58 வயது ஆண், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 50 வயது பெண் ஆகிய 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 332 ஆக உயர்ந்து உள்ளது.

    கோவையில் நேற்று ஒரே நாளில் 666 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 14 ஆயிரத்து 497 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 4 ஆயிரத்து 680 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
    Next Story
    ×