என் மலர்

  செய்திகள்

  கோப்புபடம்
  X
  கோப்புபடம்

  பிரதம மந்திரி ஊக்க நிதி திட்ட முறைகேட்டில் மேலும் 4 பேர் கைது - சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரதமமந்திரி ஊக்கநிதி திட்டத்தில் நடைபெற்ற முறைகேடு சம்பந்தமாக மேலும் 4 பேரை திருவண்ணாமலை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைதுசெய்துள்ளனர்.
  திருவண்ணாமலை:

  தமிழகத்தில் திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பிரதம மந்திரி ஊக்க நிதி திட்டத்தில் பல கோடி ரூபாய் முறைகேடு செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 18 ஒன்றியங்களிலும் கோடி கணக்கில் முறைகேடுகள் நடைபெற்று இருப்பதாகவும் கூறப்படுகிறது.

  இதுகுறித்து திருவண்ணாமலை சி.பி.சி.ஐ.டி. போலீசார் ரகசியமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு தண்டராம்பட்டு பகுதியை சேர்ந்த ஜீவா என்ற பெண்ணை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்து உள்ளனர்.

  தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியதில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தாலுகாவை சேர்ந்த வெங்கடேசன், முகிலன், அஜீத் மற்றும் முத்துக்குமார் ஆகிய 4 பேரை கைது செய்து உள்ளனர். மேலும் மாவட்ட நிர்வாகம் மூலம் அமைக்கப்பட்ட கண்காணிப்பு குழுவினர் மூலம் போலி விவசாயிகளின் வங்கி கணக்கில் இருந்து பிரதம மந்திரி ஊக்க நிதி திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட தொகை திரும்ப பெறப்பட்டு வருகிறது.

  அதன்படி நேற்று வரை ரூ.3 கோடியே 20 லட்சம் வரை போலி விவசாயிகளின் வங்கி கணக்கில் இருந்து திரும்ப பெறப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து இது குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×