என் மலர்

    செய்திகள்

    வழக்கு பதிவு
    X
    வழக்கு பதிவு

    வாணியம்பாடியில் குட்கா விற்ற 6 பேர் மீது வழக்கு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    வாணியம்பாடியில் குட்கா விற்ற 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வாணியம்பாடி:

    வாணியம்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் உள்ள சில கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் ஹான்ஸ் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு புகார்கள் சென்றது. இதையடுத்து நேற்று முன்தினம் மாலை வாணியம்பாடி டவுன் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி தலைமையில் போலீசார் சி.எல்.சாலை, கச்சேரிசாலை, இக்பால் சாலை, பெரியபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது ரியாஸ்அஹமது, கோடீஸ்வரன், முரளி, திருநாவுகரசு, சாதிக்பாட்சா, சர்தார் ஆகியோர் தங்கள் கடைகளில் ஹான்ஸ், குட்கா பொருட்கள் பதுக்கி வைத்து விற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.
    Next Story
    ×