என் மலர்
செய்திகள்

விபத்து
கோவில்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்- சிறுமி பலி
கோவில்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் சிறுமி பலியானாள். தந்தை உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
கோவில்பட்டி:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள ஊத்துப்பட்டி குமாரபுரம் காலனியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 40). கூலி தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் சாந்தி (13), ரம்யா (9), லாவண்யா (9) ஆகிய 3 மகள்கள் இருந்தனர். ரம்யாவும், லாவண்யாவும் இரட்டை குழந்தைகள் ஆவர். அங்குள்ள பள்ளிக்கூடத்தில் சாந்தி 8-ம் வகுப்பும், ரம்யா, லாவண்யா ஆகியோர் 4-ம் வகுப்பும் படித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று காலையில் செல்வராஜ் தன்னுடைய 3 மகள்களுடன் மோட்டார் சைக்கிளில் கோவில்பட்டி அருகே துறையூரில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்துக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தார்.
கோவில்பட்டி அருகே உள்ள சிவந்திப்பட்டி பகுதியில் சென்றபோது, அந்த வழியாக வந்த பஸ்சை கார் முந்திச் சென்றது. அப்போது அந்த கார் எதிர்பாராதவிதமாக செல்வராஜின் மோட்டார் சைக்கிளின் மீது பயங்கரமாக மோதியது.
இதில் சாலையில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த ரம்யா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். செல்வராஜ், சாந்தி, லாவண்யா ஆகிய 3 பேரும் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடியவாறு கிடந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் கொப்பம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். படுகாயம் அடைந்த செல்வராஜ், சாந்தி, லாவண்யா ஆகிய 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு செல்வராஜிக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இறந்த ரம்யாவின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கார் டிரைவரான கூட்டாம்புளியைச் சேர்ந்த ராஜனை (60) கைது செய்தனர். கோவில்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story