என் மலர்

  செய்திகள்

  கோப்புபடம்
  X
  கோப்புபடம்

  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நீடாமங்கலம் மற்றும் திருத்துறைப்பூண்டியில் விவசாய தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  நீடாமங்கலம்:

  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நீடாமங்கலத்தில் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய சங்க மாவட்ட செயலாளர் வி.எஸ்.கலியபெருமாள், விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகி கந்தசாமி, சி.ஐ.டி.யூ. நிர்வாகி முனியாண்டி ஆகியோர் தலைமை தாங்கினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நீடாமங்கலம் ஒன்றிய செயலாளர் சோம.ராஜமாணிக்கம், மாதர் சங்கத்தை சேர்ந்த சுமதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  மருத்துவ சேவையை அனைத்து பகுதிகளுக்கும் விரிவுபடுத்திட வேண்டும். சிகிச்சையளிக்கும் முன் களப்பணியாளர்களுக்கு வசதி செய்து தர வேண்டும். கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் அனைவருக்கும் ரேஷன் பொருட்களை தொடர்ந்து வழங்கிட வேண்டும். அனைத்து குடும்பங்களுக்கும் 6 மாதங்களுக்கு ரூ.7,500 நிவாரணம் வழங்க வேண்டும். கிராமப்புற வேலை உறுதியளிப்பு திட்டத்தில் 200 நாட்கள் வேலை வழங்கிட வேண்டும். பயிர் இன்சூரன்ஸ் நிலுவை தொகையை விடுபட்டுள்ள பகுதிகளுக்கு உடனே வழங்கிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

  இதேபோல் திருத்துறைப்பூண்டியில் காமராஜர் சிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய சங்க மாவட்ட பொருளாளர் சாமிநாதன் தலைமை தாங்கினார். முறை சாரா சங்க மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் மணியன், விவசாய தொழிலாளர் சங்க நகர செயலாளர் தண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  ஆர்ப்பாட்டத்தில் மாவட்டக்குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன், ஜோதிபாசு, நகர செயலாளர் ரகுராமன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் ரவி, நகர குழு உறுப்பினர் செல்வம், சி.ஐ.டி.யூ. சார்பில் பவுன்ராஜ் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

  Next Story
  ×