என் மலர்

  செய்திகள்

  கோப்பு படம்.
  X
  கோப்பு படம்.

  அஞ்சலக சேமிப்பு பணம் வழங்க இழுத்தடிப்பு- உயர் சிகிச்சை பெற முடியாமல் உயிரிழந்த பெண் தொழிலாளி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருச்சி அருகே அஞ்சலக சேமிப்பு பணம் வழங்க இழுத்தடித்ததால் உயர் சிகிச்சை பெற முடியாமல் பெண் தொழிலாளி ஒருவர் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  துறையூர்:

  திருச்சி மாவட்டம் துறையூர் நல்லவண்ணிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மனைவி ராணி (வயது 49). விவசாய கூலி தொழிலாளியான இவர் கால்நடை வளர்த்தும் வருவாய் ஈட்டினார். இதில் கிடைத்த தொகையில் ரூ.96 ஆயிரம் வரை பகளவாடி கிளை அஞ்சலகத்தில் கணக்கு தொடங்கி சேமித்தார்.

  இந்த நிலையில் கருப்பை நோயால் அவதியுற்ற ராணி தனது சிகிச்சைக்காக அஞ்சலக சேமிப்பு கணக்கில் இருந்த தொகையில் ரூ.46 ஆயிரத்தை வழங்க கோரி பகளவாடி அஞ்சலக ஊழியரிடம் படிவம் அளித்தார். அப்போது அஞ்சலகத்தில் பணமில்லாததால் உடனடியாக பணம் வழங்க இயலாது எனக்கூறிய அஞ்சலக ஊழியர் ராணியை மறுநாள் வருமாறு கூறியுள்ளார்.

  இதனிடையே நோய் கொடுமையால் துறையூர் தனியார் மருத்துவமனைக்கு சென்ற ராணியை பரிசோதித்த டாக்டர் உரிய சிகிச்சைக்காக திருச்சி மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்தினர். இதையடுத்து திருச்சிக்கு அழைத்து சென்ற போது வழியில் ராணி உயிரிழந்தார்.

  ராணியின் ஈமச்சடங்குக்கு பணம் கேட்டு அவரது கணவர் பகளவாடி அஞ்சலக ஊழியரை நாடி கேட்ட போது ராணி இறந்து விட்டதால் அலுவலக நடைமுறைப்படி தான் பணம் வழங்க முடியும் எனக்கூறி முதலில் பணத்தை தர மறுத்துள்ளனர்.

  அதிருப்தியடைந்த உறவினர்களும், கிராமத்தினர்களும் அஞ்சலகம் முன்பு தர்ணா செய்ய திரளுவதை அறிந்த அஞ்சலக ஊழியர் ராணி கோரியிருந்த ரூ.46 ஆயிரத்தை அவரது கணவரிடம் வழங்கினார். இந்த பணம் முன்பே கிடைத்திருந்தால் ராணி உயர் சிகிச்சை பெற்று உயிர் பிழைத்திருப்பார் என்று அவரது உறவினர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

  Next Story
  ×