என் மலர்

    செய்திகள்

    சிக்கன் பிரியாணி
    X
    சிக்கன் பிரியாணி

    ராமநாதபுரத்தில் 5 பைசாவுக்கு ஒரு பிளேட் சிக்கன் பிரியாணி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ராமநாதபுரத்தில் 5 பைசாவுக்கு ஒரு பிளேட் சிக்கன் பிரியாணி வாங்க ஏராளமான வாடிக்கையாளர்கள் குவிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், கீழக்கரை, பனைக்குளம் உட்பட பல்வேறு ஊர்களில் பிரியாணி பிரபலமாக விளங்கி வருகிறது. பிரியாணி சமைக்கும் இல்லங்களின் வழியாக நடந்து சென்றாலே வாசனை மூக்கைத் துளைக்கும்.

    பிரியாணியின் விலையை நினைக்கும் போது ஏழை, எளிய மக்களுக்கு பிரியாணி என்பது எட்டாக்கனியாகவே இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று ராமநாதபுரம் அருகே 5 பைசாவுக்கு பிரியாணி வழங்கிய நிகழ்ச்சி வரப்பிரசாதமாக இருந்தது.

    ராமநாதபுரம் பட்டணம்காத்தான் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் பிரியாணி கடை திறக்கப்பட்டது. திறப்பு விழாவை முன்னிட்டு வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்க கடையின் உரிமையாளர் 5 பைசாவுக்கு ஒரு பிளேட் சிக்கன் பிரியாணி வழங்கப்படுவதாக அறிவிப்பு செய்தார். இதையடுத்து 5 பைசா நாணயத்துடன் ஏராளமானோர் பிரியாணி வாங்க திரண்டனர்.

    ஒவ்வொருரிடமும் 5 பைசா நாணயத்தை பெற்றுக் கொண்டு ஒரு பிளேட் சிக்கன் பிரியாணி, தால்சா, தயிர் வெங்காயம் பார்சல் கொடுத்தனர். யாரிடம் 5 பைசா இருக்கும் என நினைத்துக் கொண்டு இருக்கும்போது இவ்வளவு பேர் வந்து இருந்தது ஆச்சரியம் தான் என கடைக்கு பிரியாணி வாங்க வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த மக்கள் கூறிச் சென்றனர்.

    இதுகுறித்து பிரியாணி கடை உரிமையாளர் ப்ரத் கூறுகையில், நான் ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் மதியம், இரவு என இரண்டு வேளைக்கான பிரியாணி கடை புதிதாக திறந்துள்ளேன்.

    புதிய பிரியாணி கடை மீது வாடிக்கையாளர்களின் கவனம் திரும்ப வேண்டும் என்பதற்காகவும், நாணயங்களின் பெருமையை இளம்தலைமுறையினர் உணர வேண்டும் மற்றும் பழைய நாணயங்களை சேகரித்து வைத்திருப்பவர்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதற்காக இந்தத் திட்டத்தை செயல்படுத்தினோம்.

    இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் தங்களிடம் இருந்த 5 பைசா நாணயத்தை கொடுத்து பிரியாணி வாங்கி சென்றனர் என்றார். இன்று முதல் வழக்கமான விலைக்கு பிரியாணி விற்பனை செய்யப்படுகிறது.
    Next Story
    ×