என் மலர்

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    சேலத்தில் இறந்துவிட்டதாக பேஸ்புக்கில் பதிவிட்ட அ.தி.மு.க. நிர்வாகி மரணம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சேலத்தில் இறந்துவிட்டதாக பேஸ்புக்கில் பதிவிட்ட அ.தி.மு.க. நிர்வாகி உடல்நலக்குறைவால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    சேலம்:

    சேலம் அம்மாப்பேட்டை வித்யா நகரை சேர்ந்தவர் கோட்டை பாபு (வயது 45). சேலம் மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி தலைவராக இருந்து வந்தார்.

    அ.தி.மு.க.வில் தீவிரமாக பணியாற்றி வந்த இவர் அதே கட்சியில் கொள்கை பரப்பு துணை செயலாளராக உள்ள பெங்களூரு புகழேந்தியின் உறவினர் ஆவார். ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் தீபா அணிக்கு சென்ற கோட்டை பாபு பின்னர் புகழேந்தியுடன் மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்ந்தார்.

    கடந்த சில மாதங்களாக உறவினர்களுடன் ஏற்பட்ட சொத்து தகராறில் மன உளைச்சலில் இருந்தார். மேலும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு இருந்த அவருக்கு கிட்னியும் செயல் இழந்தது.

    இதற்கிடையே கடந்த 27-ந்தேதி இறைவனடி சேர்ந்தார் என்ற பெயரில் தான் இறந்து விட்டதாக அவரே ஒரு பதிவை அவரது பேஸ்புககில் வெளியிட்டிருந்தார். இது கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட அவரை உறவினர்கள் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்தார். இந்த சம்பவம் அ.தி.மு.க.வினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×