என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    காட்டுமன்னார்கோவில் அருகே இடிதாக்கி 2 பெண்கள் பலி

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே இடிதாக்கியதில் 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே சோழத்தரம் போலீஸ் சரகம் அறந்தாங்கி கிராமத்தை சேர்ந்தவர் மரியபிரகாசம். இவரது வயலில் நேற்று மதியம் கம்பு அறுவடை நடந்தது.

    இந்த பணியில் சுத்தமல்லி கிராமத்தை சேர்ந்த சாம்பசிவம் மனைவி ஆனந்தி (வயது 35), அறந்தாங்கியை சேர்ந்த லூர்துசாமி மனைவி மரியநட்சத்திரம் (60) ஆகியோர் ஈடுபட்டனர்.

    அப்போது திடீரென பலத்த மழை பெய்தது. சிறிது நேரத்தில் இடி-மின்னலும் ஏற்பட்டது. இதில் இடிதாக்கி ஆனந்தி, மரியநட்சத்திரம் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    இது குறித்து சோழத்தரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காட்டுமன்னார்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    Next Story
    ×