என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
    X
    கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

    மதுரையில் கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை: முககவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்தனர்

    கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று காலையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. மக்கள் அனைவரும் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து வழிபாடு செய்தனர்.
    உயிர்க்கொல்லி நோயான கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் 25-ந்தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் வழிபாட்டு தலங்களில் மக்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.

    கடந்த 160 நாட்களாக ஆலயங்கள் மூடப்பட்டதால் பொதுமக்கள் வீடுகளிலேயே பிரார்த்தனை செய்தனர். ஆலயங்கள் சார்பில் செய்யப்பட்ட பிரார்த் தனைகள் இணையதளம் வாயிலாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

    இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை தமிழக அரசு இன்று முதல் தளர்த்தி உள்ளது. இதனால் அனைத்து வழிபாட்டு தலங்களும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மக்கள் வழிபாடு நடத்த திறக்கப் பட்டுள்ளது.

    அனைத்து மத கோவில்களும் திறக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மதுரை நரிமேட்டில் உள்ள சி.எஸ்.ஐ. பேராலயத்தில் இன்று காலை 6 மணிக்கு மாதத்தின் முதல்நாள் சிறப்பு பிரார்த்தனை நடை பெற்றது.

    முன்னதாக பேராலயத்தில் அமைக்கப்பட்டு இருந்த இருக்கைகள் அனைத்தும் சமூக இடைவெளியுடன் போடப்பட்டு இருந்தது. பிரார்த்தனையில் பங்கேற்ற மக்களுக்கு சானிடைசர் வழங்கப்பட்டது. மேலும் ஒவ்வொருவரின் உடல் வெப்பநிலையும் பரிசோதிக் கப்பட்டது. பிரார்த்தனையில் பங்கேற்ற அனைவரும் முக கவசம் அணிந்து கலந்து கொண்டனர்.

    இந்த சிறப்பு பிரார்த் தனையில் மதுரை-ராமநாத புரம் திருமண்டல பேரா யர் ஜோசப் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தார். மேலும் கடந்த 5 மாதங்களுக்கு பிறகு நடைபெறும் முதல் பிரார்த் தனை என்பதால் ஏராள மான மக்கள் கலந்து கொண் டனர்.

    மதுரையில் உள்ள பல்வேறு தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. மதுரையில் உள்ள பள்ளிவாசல் மற்றும் தர்காக்களிலும் முஸ்லிம்கள் இன்று தொழுகை நடத்தினர். கை குலுக்குதல், தழுவுதல் போன்ற நலவிசாரிப்புகள் அனுமதிக்கப்படவில்லை.

    ஒவ்வொருவரும் தனித்தனியாக தொழுகையில் பங்கேற்றனர். தொழுகை முடிந்ததும் கைகூப்பி வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர். தொழுகையில் பங்கேற்ற அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்தனர்.

    வழிபாட்டு தளங்களில் இன்று மக்கள் அனுமதிக்கப்பட்டாலும் ஒவ்வொருவரும் குறைந்த நேரமே கோவிலுக்குள் அமர அனுமதிக்கப்பட்டனர். பிரார்த்தனைகள் முடிந்ததும் உட னடியாக அனைவரும் வெளியேறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
    Next Story
    ×