என் மலர்
செய்திகள்

இந்தியா என்ற ஆங்கில வார்த்தை
சுதந்திர தினத்தையொட்டி 22 நிமிடங்களில் ‘இந்தியா’ என்ற வார்த்தை வடிவமைத்து சாதனை
திருச்சியில் சுதந்திர தினத்தையொட்டி மூவர்ண தேசிய கொடி அட்டைகளை வரிசையாக அடுக்கி ‘இந்தியா’ என்ற ஆங்கில வார்த்தையை வடிவமைக்கப்பட்டது.
திருச்சி:
சுதந்திர தினவிழாவையொட்டி திருச்சி இந்திரா கணேசன் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நேற்று உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடிப்பதற்கான நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கராத்தே வீரர் ஜெட்லி ஏ-3 அளவில் உருவாக்கப்பட்ட மூவர்ண தேசிய கொடி அட்டைகளை வரிசையாக அடுக்கி ‘இந்தியா’ என்ற ஆங்கில வார்த்தையை வடிவமைத்தார்.
22 நிமிடங்களில் அவர் உருவாக்கிய இந்த சாதனை நிகழ்ச்சிக்கு கல்லூரியின் இயக்குனர் பாலகிருஷ்ணன், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பக்கிரிசாமி ஆகியோர் நடுவர்களாக இருந்தனர். இந்த நிகழ்ச்சியில் தேச பிதா மகாத்மா காந்தியின் உருவ படத்திற்கு மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
Next Story