என் மலர்
செய்திகள்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் அன்பழகன்
புதிய கல்வி கொள்கை: முதல்வருடன் அமைச்சர் அன்பழகன் நாளை ஆலோசனை
மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் நாளை ஆலோசனை நடத்துகிறார்.
புதிய கல்வி கொள்கைக்கு மத்திய மந்திரி சபை ஒப்புதல் வழங்கியுள்ளது. ஐந்தாம் வகுப்பு வரை கட்டாய தாய்வழி கல்வி, மும்மொழிக்கொள்கை, 3, 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு மாநில அளவிலான தேர்வு போன்ற அம்சங்கள் பிடித்துள்ளன.
தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் இந்த புதிய கல்வி கொள்கையை எதிர்த்து வருகின்றன. திமுக தலைவர் ஸ்டாலின் மும்மொழிக்கொள்கையை கடுமையாக எதிர்த்துள்ளார்.
தமிழக அரசு இதுவரை கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.
இந்நி்லையில் நாளை தமிழகத்தின் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்துகிறார்.
இந்த ஆலோசனையில் உயர்க்கல்வி செயலர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
Next Story






