என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமாவளவன் பிறந்தநாளில் ஏழை எளிய மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    X
    திருமாவளவன் பிறந்தநாளில் ஏழை எளிய மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    திருமாவளவன் பிறந்த நாளில் ஏழை, எளிய மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம்

    திருமாவளவன் பிறந்தநாளில் ஏழை எளிய மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்க விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    கடலூர்:

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆலோசனை கூட்டம் கடலூரில் நடந்தது. கூட்டத்துக்கு கடலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தாமரைச்செல்வன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மேற்கு மாவட்ட செயலாளர் துரை.மருதமுத்து, தெற்கு மாவட்ட செயலாளர் பால.அறவாழி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    இதில் மாவட்ட துணை அமைப்பாளர் மோ.தாஸ், மாநில செயற்குழு உறுப்பினர் முரளி, நகர செயலாளர் ராஜதுரை, நகர துணை செயலாளர்கள் சசிதரன், பிரபு, ராஜ்குமார், புவனகிரி மாறன் நெய்வேலி குழந்தைராஜ், ரவி, மோகன், ராம்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஆகஸ்டு 17-ந்தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பிறந்த நாளை வெகு சிறப்பாக கொண்டாடுவது, அன்றைய தினத்தில் ரத்த தானம் வழங்குவது, ஏழை , எளிய மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம் வழங்குவது, மக்களுக்கு நிவாரணம், அன்னதானம் வழங்குவது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    Next Story
    ×