என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
கைது
திருவள்ளூர் அருகே குட்கா பாக்கெட்டுகளுடன் சுற்றி திரிந்த பெண் கைது
By
மாலை மலர்7 July 2020 10:01 AM GMT (Updated: 7 July 2020 10:01 AM GMT)

திருவள்ளூர் அருகே குட்கா பாக்கெட்டுகளுடன் சுற்றி திரிந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு போலீசார் மேல்மணம்பேடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது பெண் ஒருவர், போலீசாரை கண்டதும், தான் வைத்திருந்த பையுடன் தப்பி ஓட முயன்றார். சந்தேகம் அடைந்த போலீசார், அவரை பிடித்து விசாரித்தபோது அவர் அதே பகுதியை சேர்ந்த விஜயா (வயது 55) என்பதும், அவர் வைத்திருந்த பையில் அரசால் தடை செய்யப்பட்ட 40 குட்கா பாக்கெட்டுகள் இருந்ததும் தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், விஜயாவை கைது செய்தனர்.
அதேபோல் திருவள்ளூர் டவுன் போலீசார் திருவள்ளூர் பெரியகுப்பம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்கு பணம் வைத்து சூதாடிய பெரியகுப்பத்தை சேர்ந்த துரை (27) என்பவரை கைது செய்தனர். தப்பி ஓடிய மற்றொருவரை தேடி வருகின்றனர்.
திருத்தணி அருகே உள்ள மேல்முரக்கம்பட்டில் சூதாட்ட முறையில் சேவல் சண்டை போட்டிகள் நடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து திருத்தணி போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு சேவல் சண்டை போட்டிகள் நடத்தியவர்கள் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடிவிட்டனர். இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story
×