என் மலர்
செய்திகள்

சிறப்பு பஸ்
அரசு ஊழியர்கள் சென்னை செல்ல சிதம்பரத்தில் இருந்து சிறப்பு பஸ் இயக்கம்
அரசு ஊழியர்கள் வேலைக்காக சென்னை செல்ல சிதம்பரத்தில் இருந்து சென்னைக்கு சிறப்பு பஸ் இயக்கப்பட்டது.
கடலூர்:
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க கடந்த மார்ச் 25-ந் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தற்போது 5-வது கட்டமாக வருகிற 30-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்கள் அனைத்தும் மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, கடந்த 1-ந் தேதி முதல் 60 சதவீத பயணிகளுடன் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இதன்படி கடலூரில் இருந்து கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு மட்டும் பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும் கடந்த 10-ந் தேதி முதல் தனியார் பஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே சென்னையில் பணிபுரியும் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த அரசு ஊழியர்கள், சென்னைக்கு சென்று வர சிறப்பு பஸ்களை இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் முடிவு செய்தது. அதன்படி சிதம்பரத்தில் இருந்து நேற்று அதிகாலை 4.45 மணிக்கு சிறப்பு பஸ் புறப்பட்டது. முன்னதாக பஸ்சுக்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. மேலும் அரசு ஊழியர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட்ட பிறகே பஸ்சில் ஏற அனுமதிக்கப்பட்டனர்.
காலை 6 மணிக்கு கடலூர் வந்த பஸ் பிறகு, புதுச்சேரி இ.சி.ஆர். மார்க்கமாக சென்னைக்கு சென்றது. இந்த பஸ்சில் பயணம் செய்த அரசு ஊழியர்கள் முக கவசம் அணிந்தபடியும், 3 பேர் அமரக்கூடிய இருக்கையில் 2 பேரும், 2 பேர் அமரக்கூடிய இருக்கையில் ஒருவரும் அமர்ந்து பயணம் செய்தனர்.

Next Story